IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு – காத்திருப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?

0
IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு - காத்திருப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?
IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு - காத்திருப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?
IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு – காத்திருப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?

IRCTC மூலம் ரயில் பயணங்களுக்காக முன்பதிவு செய்யும் போது உங்கள் டிக்கெட் காத்திருப்பு நிலையில் இருந்தால் அது உறுதிப்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய உதவும் சில எளிய வழிமுறைகளை இப்பதிவில் விரிவாக காணலாம்.

காத்திருப்பு டிக்கெட்:

இன்றைய தொழில்நுட்ப உலகில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் உணவு ஆர்டர் செய்வது வரை பல வசதிகள் ஆன்லைன் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு அரசாங்கம் IRCTC என்ற ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் கூட, ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே இரட்டிப்பாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் இப்போது ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளுக்குப் பதிலாக 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஜூன் 16 முதல் CBSE பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!

இருப்பினும், இந்த சேவையை பெற்றுக்கொள்ள IRCTC கணக்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தவிர இந்த IRCTC செயலியில் இரவில் பயணம் செய்யும் பயணிகள் இலக்கு எச்சரிக்கையை அமைக்கும் விருப்பத்தையும் பெறுகின்றனர். இதன் உதவியுடன், அவர்களது இலக்கு (இறங்கவேண்டிய) ரயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் எச்சரிக்கை அனுப்பப்படும். இது தவிர இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் செயலி மூலம் மக்கள் இன்னும் பல வசதிகளைப் பெற முடியும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் நீங்கள் ரயில் பயணத்திற்காக டிக்கெட்டை முன்பதிவு செய்து அது காத்திருப்பு நிலையில் இருக்கிறது என்றால் அது உறுதி செய்யப்பட்டு விட்டதா என்பதை IRCTC இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக சில எளிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில், டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகும், PNR எண்ணின் உதவியுடன் அதை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த செயலியில் நீங்கள் பார்க்கலாம். இப்போது காத்திருப்பு டிக்கெட் உறுதி செய்யப்படுவதை கண்டறிய உங்களிடம் PNR எண் இருக்க வேண்டும்.

  • இப்போது IRCTC இணையதளத்திற்கு செல்லவும்.
  • உங்கள் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
  • இதற்குப் பிறகு, அடுத்த பக்கத்தில் PNR எண்ணை உள்ளிட்டு Get Status என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் கீழே ஸ்க்ரோல் செய்து வரவும்.
  • உறுதிப்படுத்தல் வாய்ப்பைப் பெற இங்கே கிளிக் செய்யவும் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள்.
  • அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அவ்வாறு செய்தால் புதிய பாப்-அப் விண்டோ திறக்கும்.
  • அதில், உங்கள் டிக்கெட்டை உறுதிப்படுத்துவதற்கான தகவல் கொடுக்கப்படும்.
  • இதன் மூலம் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுமா, இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் உங்கள் வசதிக்கேற்ப பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!