Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மொபைல் போன் அனைவரும் பயன்படுத்தும் பொருளாகி வந்துள்ள நிலையில் ஆண்ட்ராய்டு அத்தியாவசியமாகி உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் ஆட்டோ-கரெக்ட் வசதியை முடக்குவது எப்படி என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ-கரெக்ட்:

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மொபைல் போன் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. மொபைல் போன் கருத்து பரிமாறுவதற்கு கால் செய்யவும் மெசேஜ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள கீபோர்டு டைப் செய்யும் போது அதில் உள்ள பிழைகளை தாமாக திருத்தும் அம்சம் கொண்டுள்ளது. இந்த அம்சமானது சில நேரம் பயனுள்ளதாகவும் சில நேரம் தடையாகவும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – அமைச்சர் உத்தரவு!

தானாக திருத்தும் வசதி இயக்கப்படும் பட்சத்தில் நாம் கூற வரும் ஒன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தாமாக மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழலில் இத்தனையோ பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. நேட்டிவ் ஆண்ட்ராய்டு ஜி போர்டு பயன்படுத்தும் பட்சத்தில் தானாக திருத்தும் அம்சத்தை நிறுத்த விரும்பும் பட்சத்தில் சில எளிய வழிமுறைகள் மூலம் அதனை முடக்க முடியும்.

  • பயனர்கள் ஆண்டிராய்டு போனில் உள்ள செட்டிங் பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • ‘சிஸ்டம்’ அல்லது ‘பொது மேலாண்மை’ என்னும் மெனுவில் இருக்கும் மொழிகள் மற்றும் உள்ளீட்டு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் virtual keyboard என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன்பின் ஆண்டிராய்டு விசைப்பலகையில் Gboard-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த அம்சம் சிலருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் தடையாகவும் இருக்கும்.
  • சொந்த ஆண்டிராய்டு விசைப்பலகைக்கான அமைப்புகள் மெனு திறக்க வேண்டும்.
  • உரை திருத்தம் விருப்பத்தை க்ளிக் செய்து, தானியங்கு திருத்தத்திற்கு அடுத்துள்ள நிலை மாற்றத்தை ஸ்லைடு செய்ய வேண்டும்.
  • ஆண்ட்ராய்டில் வேறு சில விசைப்பலகை பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தானியங்கு திருத்த அம்சத்தை இயக்குவதற்கும் முடக்குவதற்கு இந்த குறிப்புகள் சிறிது மாறுபடும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!