ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதுவே முக்கிய ஆவணமாக கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெற ஆன்லைன் மூலம் எளிதாக பெறலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது ஊரடங்கு மாதங்களில் நிவாரண தொகைகள், இலவச மளிகை பொருட்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகை பொருட்கள் கொண்ட பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சென்னை: ஜெட் வேகத்தில் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெறவும் பிற தனிப்பட்ட வேலைகளுக்கும் ரேஷன் கார்டு இருப்பிட சான்றாக எடுத்து கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு ரேஷன் கார்டுகளே பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டு இருந்தால் அதை வைத்து எளிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டாக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தபடியே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை கீழ்கண்ட பதிவில் காண்போம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் இதோ!
  • https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உள்ள மின்னணு அட்டை சேவைகள் என்ற பிரிவில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்ததாக வரும் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
  • ஆவணங்களாக குடும்பத் தலைவரின் புகைப்படம் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இறுதியாக அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit கொடுக்கவும். உங்களுக்கு ஒரு Reference Number வழங்கப்படும். அதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டு குறித்த தகவல்களை அறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!