ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

வங்கி பரிவர்த்தனைகளுக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக பான் கார்டு உள்ள நிலையில், அது தொலைந்து போய் விட்டால் எப்படி மீண்டும் எளிமையாக பெறுவது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

பான் கார்டு:

நமது வங்கி பரிவர்த்தனைகள் முதல் சொத்து பதிவு முதல் அனைத்திற்கும் பான் கார்டு அவசியமாகும். மேலும் வருமான வரி செலுத்துவது, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. பான் கார்டில் உள்ள 10 இலக்க எண் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் முக்கியமாகும். இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து விட்டால் எவ்வாறு எளிய முறையில் பெறுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அனைத்து பள்ளிகளும் மூடல் – அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாட்டின் வருமான வரித்துறை பான் கார்டு தொலைந்து மீண்டும் பெறுவதற்கு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. பல வசதிகளும் தற்போது ஆன்லைன் முறையில் ஆரம்பிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இ- பான் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-பான் என்பது வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் கார்டு ஆகும். இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம்.

Exams Daily Mobile App Download

பான் கார்டு நகலை ஆன்லைன் மூலமாக நாமே வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம். இதற்காக நாம் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த தளத்தில் நமது பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அவற்றை பதிவு செய்து விட்டு, ஆதார் சரிபார்ப்பிற்கு பிறகு கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். பின்னர், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு டவுன்லோடு செய்து உங்களுடைய பான் கார்டு நகலை PDF வடிவில் பெறலாம். இந்த பான் கார்டு நகல் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!