தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தனி நபர் அடையாள ஆவணங்களுள் ஒன்று ரேஷன் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி மலிவான விலையில் உணவு பொருட்களை வாங்கலாம். இதனை தற்போது எளிமையாக ஆன்லைன் முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் கார்டு மூலமாக மலிவான உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தனிநபரின் முக்கிய அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. இதனை பெறுவதற்கு மாத கணக்கில் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 14ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

தற்போது ரேஷன் கார்டை பெறுவதற்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து 3 நாளுக்குள் அப்ரூவல் பெற முடியும். இதையடுத்து 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டை பெற முடியும்.

ரேஷன் கார்டை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. இதையடுத்து இதில் தற்போது புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக நிரப்ப வேண்டும்.

4. இதனை தொடர்ந்து குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்பதில் 5MB கொண்ட போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. அட்டை தேர்வு என்பதில் தங்களுக்கு தேவையான அட்டையை தேர்வு செய்ய வேண்டும்.

6. அடுத்தாக இருப்பிட சான்று என்ற இடத்தில் ஏதேனும் 1MB கொண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7. இப்போது உறுப்பினர்கள் சேர்க்கை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயர் கொடுக்க வேண்டும். இதையடுத்து பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.

8. இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இதையடுத்து குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும். இதில் பிறந்த குழந்தை எனில் பிறப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆதார் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

10. பின்பு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ் கேட்கபட்டுள்ள விவரங்களை கொடுத்து உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

11. இறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து மீண்டும் உறுதி செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

12. இப்பொது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்ற செய்தியும், குறிப்பு எண் அனுப்பப்படும்.

13. இந்த குறிப்பு எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்து விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க முடியும்.

14. அத்துடன் ஆதார் கார்டு, போட்டோ, ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம், விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்.

15. ஆவணங்கள் சரியாக இருப்பின் ரேஷன் கார்டுக்கு அப்ரூவல் கிடைக்கும். இதனை தொடர்ந்து ரேஷன் கார்டு 15 நாட்களில் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here