இந்தியாவில் குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

0
இந்தியாவில் குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
இந்தியாவில் குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
இந்தியாவில் குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் என பல இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடையாள சான்றாக மட்டும் அல்லாது, பல நோக்கங்களுக்கான மத்திய அரசு கட்டாயமாக்கி வருகின்றது.

பால் ஆதார் அட்டை:

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) பால் ஆதார் (Baal Aadhaar) அட்டைக்கான விண்ணப்ப செயல்முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் பால் ஆதார் என்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை ஆகும், இதற்கான விண்ணப்ப செயல்முறையில் தான் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கான ஆதார் அட்டையை பதிவு செய்ய, குழந்தை பிறந்த மருத்துவமனையின் சான்றிதழ் அல்லது டிஸ்சார்ஜ் சீட்டை வழங்குவதன் மூலமும் பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – முழு விபரம் இதோ!

முன்னதாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கூட பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இப்போது ஐந்து வயதை தாண்டிய குழந்தைகளுக்கு மட்டுமே பயோமெட்ரிக் சரிபார்ப்பு நிகழ்த்தப்படும். இனிமேல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், பால் ஆதாரை பெற இரண்டு முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், மற்றொன்று பெற்றோரில் ஒருவரின் ஆதார் அடையாளம் (அல்லது பதிவுச் சீட்டு), இந்த இடத்தில் தாயுடைய ஆவணத்திற்கு முன்னுரிமை அளிப்பது நல்லது.

பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி:

விண்ணப்பதாரரின் குழந்தை இந்திய குடிமகனாக / குடிமகளாக இருக்க வேண்டும்.

ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் போது குறிப்பிட்ட குழந்தைக்கு வயது ஐந்துக்குள் இருக்க வேண்டும்.

பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

பிறப்பு சான்றிதழை வழங்கும் பதிவாளர், முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது தாலுகா, தாலுகாவை போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது குழந்தை பிறந்ததற்காக அரசு மருத்துவமனைகளால் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் கார்டு / சீட்டு.

      1. குழந்தையின் பெற்றோர் வசிக்கும் வீட்டின் முகவரிச் சான்று
      2. பெற்றோரின் ஆதார் அட்டை எண்
      3. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
      4. பெற்றோரின் தொலைபேசி எண்.

பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் யுஐடிஏஐ-யின் (UIDAI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குள் செல்லவும்
  • குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் நுழைந்ததும், அங்கே ஆதார் பதிவுக்கான (Aadhaar enrollment) டேப்-ஐ கிளிக் செய்யவும். பின்னர் குழந்தையை பற்றிய தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • பதிவு (registration) செய்து முடிக்கவும்.
  • முடிந்ததும், அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA), உறவு சார்ந்த சான்று (POR) மற்றும் பிறந்த தேதி (DOB) உள்ளிட்ட குழந்தைக்கு தொடர்புடைய அனைத்து வகையான ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும்.
  • அங்கே நீங்கள் கொண்டு சென்ற அனைத்து ஆவணங்களையும் ஒரு அதிகாரி ஆய்வு செய்வார். ஒருவேளை உங்கள் குழந்தையின் வயது ஐந்துக்கு மேல் இருந்தால், அந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையிடம் இருந்து பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும்; அதாவது டிமோகிராஃபிக் தகவல் மற்றும் முக அங்கீகாரம் போன்ற தரவுகள் எடுக்கப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!