அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி?
இந்தியாவில் தனிநபரின் அடையாள ஆவணங்களில் ஒன்று ரேஷன் அட்டை ஆகும். ரேஷன் கார்டு மூலமாக அரசு அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் கார்டு
இந்தியாவில் தனிநபரின் முகவரி சான்றாகவும் அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டை பயன்படுத்தி மலிவான விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமானதாகும். அதனால் இந்த ரேஷன் கார்டுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இதனை தொடர்ந்து ரேஷன் கார்டையும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளதால் எங்கு இருந்தாலும் ரேஷன் கார்டுதார்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் அனைவரது பெயர்களும் இடம் பெற்றிருக்கும். இதையடுத்து புதிதாக மணமுடித்து வீட்டுக்கு வரும் மருமகள் அல்லது புதிதாய் பிறந்த குழந்தை உள்ளிட்டவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இணைப்பது கட்டாயமாகும்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அரசு சொன்ன ஹாப்பி நியூஸ்!
தற்போது ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திருமணமான பெண்ணின் ஆதார் அட்டையில் கணவரின் பெயரை சேர்க்க வேண்டும். அத்துடன் முகவரியையும் மாற்ற வேண்டும். அதன்பின்பு மாற்றப்பட்ட விவரங்களுடன் கூடிய ஆதார் கார்டின் நகல் மற்றும் ரேஷன் கார்டில் பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை உணவுத் துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து புதிதாக பிறந்த குழந்தைக்கு முதலில் பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு தயார் செய்ய வேண்டும். அடுத்ததாக ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க வேண்டும்.