தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய நபர்களின் பெயர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய நபர்களின் பெயர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய நபர்களின் பெயர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய நபர்களின் பெயர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

தமிழகத்தின் முக்கிய ஆவணமான குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர்கள் பெயர்களை சேர்ப்பது எப்படி? மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? போன்ற முழு தகவல்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டுகள்:

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை கருதப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை மலிவான விலையில் பெற முடியும். அந்த வகையில் கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

இந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க பல்வேறு முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. அந்த ஆவணங்கள் ஆதார் கார்டு, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்றவை ஆகும்.

1. இந்த வகையில் குடும்பத்திற்கு திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் வந்தால், முதலில் அவரது ஆதார் அட்டையை புதுப்பிக்கவும். பின்பு பெண் உறுப்பினர் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும்.

2. குழந்தையின் பெயரை சேர்க்க தந்தையின் பெயர் கட்டாயம் மற்றும் முகவரியையும் மாற்ற வேண்டும்.

3. ஆதார் அட்டையில் புதுப்பித்த பின், திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலுடன், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, உணவுத் துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்.

4. ஒரு வீட்டில் பிறந்த குழந்தை இருந்தால், முதலில் குழந்தையின் ஆதார் அட்டை எடுக்க வேண்டும். இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படும். அதன் பிறகு, ஆதார் அட்டையில் பெயரைப் பதிவு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை வரவு? DA நிலுவைத்தொகை வெளியீடு!

5. மேலே சொல்லப்பட்ட செயல்முறைகள் அனைத்தையும் முடித்த பிறகு, உங்களது விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

6. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த படியே புதிய உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

7. இந்த வகையில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டில் புதிய பெயர்களை சேர்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here