ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது ரேஷன் கார்டில் புதிதாக குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க விரும்புபவர்களுக்கு ஆன்லைன் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

பெயர் இணைப்பு

இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், அதாவது குடும்ப நபர்கள், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தான் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அரசு தரும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கம், நேரடி வகுப்புகளுக்கு அனுமதி – அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இந்த பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அரசு வழங்கி இருக்கும் ரேஷன் கார்டுகள் அவசியமானதாகும். இந்த ரேஷன் கார்டுகள் ஆனது ஆதார் அட்டையை போலவே ஒரு தனி நபரின் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். இப்போது ஒரு குடும்பம் வளரும் போது புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆன்லைனில் எளிதாக சேர்க்க முடியும்.

குறிப்பாக திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றின் மூலம் ரேஷன் கார்டுகளில் புதிய நபரை இணைக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ரேஷன் கார்டில் புதிய நபர்களை சேர்ப்பதற்கு சில எளிய ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முதலாவதாக சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.

அந்த வகையில் குழந்தையின் பெயரை சேர்க்க:
  • குடும்பத் தலைவரின் புகைப்பட நகலுடன் அசல் ரேஷன் கார்டு
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோரின் ஆதார் அட்டை
புதிதாக திருமணமானவரின் பெயரைச் சேர்க்க:
  • புதிய குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை
  • திருமண சான்றிதழ்
  • புதிய உறுப்பினரின் பெற்றோரின் ரேஷன் கார்டு
இப்போது ஆன்லைனில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க:
  • மாநில உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்
  • உள்நுழைவு ஐடியை உருவாக்கவும்.
  • அல்லது உங்களிடம் ஏற்கனவே ஐடி இருந்தால் அதில் உள்நுழையவும்
  • புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கான விருப்பம் முகப்பு பக்கத்தில் தோன்றும்
    அதை கிளிக் செய்யவும்
  • ஒரு புதிய படிவம் தோன்றும்
  • உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர் பற்றிய அனைத்து தகவல்களையும் நிரப்பவும்
  • தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்றவும்
  • படிவத்தை சமர்ப்பித்த பிறகு உங்கள் படிவத்தை கண்காணிக்க பதிவு எண்ணை பெறுவீர்கள்
  • இப்போது புதிய ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!