ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலமாக குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விவரம்!

0
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலமாக குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விவரம்!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலமாக குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விவரம்!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலமாக குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விவரம்!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசால் வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். புதிதாக குடும்ப அட்டையில் ஆன்லைன் மூலமாக ஒருவரது பெயரை எவ்வாறு சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டை:

நாடு முழுவதும் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் ரேஷன் கடைகளை நம்பியே உள்ளனர். மேலும் ரேஷன் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி அரசு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தப்படலாம்.

நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு தளர்வுகள் – திரிபுரா அரசு உத்தரவு!

குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் ரேஷன் அட்டையில் இருக்கும். இந்நிலையில் புதிதாக குடும்பத்தில் உறுப்பினர் சேர்ந்தால் அவர்களின் பெயரையும் இணைப்பது அவசியமாகும். அதாவது குடும்பத்தில் புதிதாக ஒருவருக்கு திருமணம் முடிந்திருந்தால் அவரது பெயரை சேர்க்க வேண்டும் அல்லது குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தால் அல்லது தத்தெடுக்கப்பட்டால் அவரின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும். தற்போது புதிதாக குடும்ப உறுப்பினரை ரேஷன் அட்டையில் எவ்வாறு ஆன்லைன் மூலமாக சேர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

திருமணத்திற்கு பின்னர் புதிய உறுப்பினர் பெயர் எவ்வாறு சேர்ப்பது?

ஒரு குடும்பத்தில் மகனுக்கு திருமணம் முடிந்து மருமகள் வீட்டிற்கு வரும் போது ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அதில் தனது தந்தையின் பெயருக்கு பதிலாக தனது கணவரின் பெயரை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் புகுந்த வீடு முகவரியை புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்ட பிறகு, புதிய ஆதார் அட்டையின் நகலுடன் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க உணவுத்துறை அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை எப்படி சேர்ப்பது?

உங்களது வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால் அல்லது தத்தெடுத்தால், அவருடைய பெயரை ரேஷன் கார்டில் பதிவு செய்ய, அவருடைய ஆதார் அட்டை முதலில் செய்யப்பட வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாமல் அவரது பெயரை சேர்க்க முடியாது. அதே நேரத்தில், ஆதார் அட்டை தயாரிக்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உங்களுக்கு தேவைப்படும். தேவையான அனைத்து ஆவணங்களையும் சேர்த்த பிறகு, உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

ஆன்லைன் மூலமாக குடும்பத்தில் புதிய உறுப்பினர் பெயரையும் சேர்க்கலாம்.

இதற்கு உங்களது மாநிலத்தின் உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் உங்களது மாநிலத்தில் இந்த சேவையை ஆன்லைனில் வழங்குகிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். டெல்லி, மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் சேவை வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!