தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?

தமிழகத்தில் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் போன்ற வேலைகளை தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் செய்யலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் மாநில அரசுகள் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் பணி புரிபவர்கள் மத்திய அரசின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்.5ம் தேதிக்கு மாற்றம் – அரசு அறிவிப்பு!

மேலும் வெள்ளை ரேஷன் கார்டு, பிங் ரேஷன் கார்டு என்று 5 வகை ரேஷன் கார்டுகள் உள்ளது. முன்பெல்லாம் ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலம் எளிதாக செய்யலாம். மக்கள் எவ்வாறு வீட்டிலிருந்த படியே ரேஷன் கார்டில் பெயர் மாற்றங்கள், சேர்த்தல், நீக்குதல் என்பது குறித்து பார்க்கலாம்.

  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும் அதில் பயனாளர் நுழைவு’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளீடு , கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்யவும்.

  • பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்’ என்பதை தேர்வு செய்யவும்.பிறகு புதிய கோரிக்கை’ என்பதை கிளிக் செய்யவும்.
  • குடும்ப அட்டை எண், குறியீடு எண் ஆகியவற்றை உள்ளீடு சேவை தேர்வுகளில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை தேர்தெடுத்து காரணத்தைக் குறிப்பிடவும். மேலும் அதற்கான உரிய ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து, `பதிவு செய்ய’ என்பதை க்ளிக் செய்த பிறகு 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!