மிஸ்டு கால் கொடுத்தால் புதிய LPG இணைப்பு – இந்தியன் ஆயில் அறிமுகம்!

0
மிஸ்டு கால் கொடுத்தால் புதிய LPG இணைப்பு - இந்தியன் ஆயில் அறிமுகம்!
மிஸ்டு கால் கொடுத்தால் புதிய LPG இணைப்பு - இந்தியன் ஆயில் அறிமுகம்!
மிஸ்டு கால் கொடுத்தால் புதிய LPG இணைப்பு – இந்தியன் ஆயில் அறிமுகம்!

இந்தியாவில் புதிய சமையல் சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற விரும்புபவர்கள் ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் உடனே புதிய இணைப்பு கிடைக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிலிண்டர் இணைப்பு:

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமையல் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளனர். தற்போது இந்த சமையல் சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சிலிண்டர்கள் விலையை நிர்ணயிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சிலிண்டரின் விலை ரூ.25.50 அதிகரித்து 850.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!

இந்த நிலையில் ஒரு சிலிண்டரின் விலை 1000 ரூபாயைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் Paytm ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு சிறந்த சலுகைகளையும் அந்நிறுவனங்கள் வழங்கியது. அதனை தொடர்ந்து தற்போது புதிய சமையல் சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற விரும்புபவர்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனே புதிய இணைப்பு கிடைக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன்படி புதிய கேஸ் இணைப்பு பெற 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் மூத்த குடிமக்களும் ஊரகப் பகுதிகளை சார்ந்தவர்களும் பயனடைவார்கள் என அந்நிறுவன தலைவர் கூறினார். மேலும் வாடிக்கையாளர்கள் இரட்டை இணைப்பு வசதியை பெறலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!