TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?

தமிழகத்தில் கடந்த மே 21ம் தேதி நடைபெற்ற குரூப்2,2A தேர்வுக்கான விடை குறிப்பு வெளியாகி உள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விடை குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2, 2A தேர்வின் அறிவிப்பு வெளியானது. இந்த குரூப்2 தேர்வின் கீழ் 5000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான தேர்வு மே 21 அன்று நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்தது.

TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Work From Home முடிவு!

இதனையடுத்து அறிவிக்கப்பட்டபடி தமிழகம் முழுவதும் குரூப் 2, 2A முதல் நிலை தேர்வு சிறப்பாக நடைப்பெற்று முடிவடைந்தது. சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அதனைத்தொடர்ந்து கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரமும் வெளியாகியது. அதில் கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று குரூப்2,2A முதல் நிலை தேர்வின் அதிகாரபூர்வ விடை குறிப்பு வெளியாகி உள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் ஜூன் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்பதை கிளிக் செய்து தேர்வர்கள் முறையீடு செய்ய வேண்டும். ஜூன் 3 பிறகு இந்த சேவை நிறுத்தப்படும். மேலும் தேர்வர்கள் விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கு ஆதாரமாக புத்தகத்தின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மேல் முறையீடு செய்யும் வசதி தேர்வர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் TNPSC இணையத்தளத்தில் தங்களின் பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாட பெயரை போன்றவைகளை உள்ளீட்டு மேல் முறையீடு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!