அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் இதோ!

0
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய விதிமுறைகள் இதோ!
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய விதிமுறைகள் இதோ!
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் இதோ!

தற்போது அரசுத் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற விரும்பும் நபர்கள் இந்த விருப்ப ஓய்வில் உள்ள சில நன்மைகள், சலுகைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இந்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

விருப்ப ஓய்வு

இன்றைய கால கட்டத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது பலருக்கும் குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதாவது, அரசு வேலைகளுக்காக பல லட்சக்கணக்கானவர்கள் காத்திருப்பதால் பல முறைகள் முட்டி மோதினாலும் கூட சிலருக்கு அரசு வேலை அமைந்தபாடில்லை. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை ஒரு அரசுத் துறையில் 5000 காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்றால் அதற்கு 5 லட்சம், 10 லட்சம் என போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால் பலரது அரசு வேலை கனவு இன்று வரையும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இப்படி இருக்க அரசுத் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற விரும்பும் நபர்கள் இந்த விருப்ப ஓய்வில் உள்ள சில நன்மைகள், சலுகைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் ஒருவர் அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்ய வேண்டும். இது மொத்த பணிக்காலம் என்ற கணக்கில் எடுக்கப்படும். இதில், மருத்துவச் சான்று இல்லாத சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை கணக்கிலான பணிக்காலம், பணிமாற்றத்தின் போது ஏற்படும் இடைக்காலம், வரண்முறை இல்லாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி ஆகியவை தகுதியற்ற பணிக்காலம் எனப்படும்.

இந்த காலத்தை தவிர்த்து மொத்தம் 20 ஆண்டுகள் பணிக்காலம் என்பது விருப்ப ஓய்வுக்கு அவசியம் ஆகும். இப்போது 20 வருட பணிக்காலம் முடித்த ஒருவர் ஓய்வு பெறும் மூன்று மாதத்திற்கு முன் அறிவிப்பு செய்ய வேண்டும். இது மூன்று மாத நோட்டீஸ் கால அடிப்படையில் கணக்கிடப்படும். அடுத்ததாக, 60 வயது பூர்த்தியான பிறகு ஓய்வு பெற விரும்புபவர்கள், 60 வயது பூர்த்தியாகும் காலத்தை கணக்கிட்டு ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு ஊழியர் ஓய்வு எடுக்க இருக்கும் 6 மாதத்திற்கு முன்பே ஓய்வுக்கால பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் ஓய்வு பெறும் அடுத்த நாளில் இருந்து பணபலன்களை அனுபவிக்கலாம். ஆனால் விருப்ப ஓய்வு கோருபவர்களுக்கு இந்த வசதி இருக்காது. இப்போது ஓய்வூதியப் பலன்களான ஓய்வூதியம், பணிக்கொடை பெறுவதற்கு அரையாண்டு கணக்கில் பணிக்காலம் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு ஊழியர் 25 ஆண்டுகால பணியை முடித்திருந்தால், அவரது பணிக்காலம் 50 அரையாண்டுகள் என கணக்கிடப்படும். அதே நேரத்தில் 22 ஆண்டு, 2 மாதம் மற்றும் 29 நாள் பணி நிறைவு செய்பவர்களுக்கு பணிக்காலம் 22 ஆண்டுகள் என இருக்கும்.

மேலும் 22 ஆண்டுகள், 3 மாதம் பணி நிறைவுக்கு 45 அரையாண்டுகள் என கணக்கிடப்படும். இப்போது விருப்ப ஓய்வு பெற விரும்புபவர்கள் 22 ஆண்டு 2 மாதம் 30 நாள் பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தால், ஒரு அரையாண்டுக்கான கூடுதல் பணப்பலன்களை பெறலாம். இதில், 20 வயதில் அரசுப்பணியில் சேர்ந்து 43 வயதில் ஓய்வு பெற விரும்புபவர்கள் அந்த தேதியை ஒரு நாள் ஒத்திவைப்பதன் மூலம் வழக்கமான பென்ஷன் தொகையான ரூ.14,61,078 விட ரூ.14,88,135 கூடுதலாக பெறலாம். அதே நேரத்தில் பணிக்கொடையாக ரூ.15,91,650 பெற வேண்டியவர் ரூ.16,21,125 பெறலாம்.

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.50,000/-

தவிர ரூ.53,055 பென்ஷனாக கிடைக்கும் இடத்தில் ரூ.54,038 ஐ மாதாந்தர பென்ஷனாக பெறலாம். இதன் மூலம் ஒருவருக்கு கூடுதலாக ரூ.983 பென்ஷன் கிடைக்கும். இத்தொகை காலப்போக்கில் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை உயரலாம். இப்போது பென்ஷனுக்கு முழு சர்வீஸ் என்பது 30 வருட காலம் ஆகும். ஆனால் பணிக்கொடைக்கு முழு சர்வீஸ் என்பது 33 வருடம் ஆகும். இந்த விருப்ப ஓய்வு பற்றிய விதியில் ஒரு சில பகுதிகள் தெளிவாக தெரியவில்லை என்றாலும், 20 வருடங்கள் பணி செய்தவர் அல்லது 50 வயதானவர் விருப்ப ஓய்வு பெறலாம் என்பது மட்டுமே தெளிவாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!