ஆதார் கார்டு வைத்துள்ளவரா நீங்கள்? எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல இ-ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்துள்ளவரா நீங்கள்? எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல இ-ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்துள்ளவரா நீங்கள்? எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல இ-ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்துள்ளவரா நீங்கள்? எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல இ-ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமான ஆதார் அட்டை வங்கிச் சேவைகள், ரயில் அல்லது விமான டிக்கெட் பதிவு செய்வது, அரசு சேவைகளை பெறுவது என அனைத்து சேவைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இ-ஆதார் என்ற டிஜிட்டல் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி:

ஆதார் அட்டை நம் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. இன்று, கிட்டத்தட்ட அனைத்து வகையான அதிகாரப்பூர்வ மற்றும் முறைசாரா வேலைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இருப்பினும் ஆதார் அட்டையை நாம் எப்போதும் கையில் வைத்து கொள்ள முடியாது. அதற்கு மாற்றாக இ-ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – மார்ச்சில் வெளியாகும் அறிவிப்பு!

இ-ஆதார் என்பது நமது ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவம் ஆகும். உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஆதார் கார்டும் டிஜிட்டல் கார்டாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த இ-ஆதார் க்கு பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ளது. இதன் அடிப்படையில் நமது டிவைசில் உள்ள டிஜிட்டல் ஆதாரை மற்றவர்கள் அவ்வளவு எளிதாக ஊடுருவி பார்த்துவிட முடியாது என்பதுதான் இந்த இ-ஆதார் யின் சிறப்பு அம்சம் ஆகும். மேலும் இந்த டிஜிட்டல் கார்டை எளிமையான முறையில் டவுன்லோட் செய்யலாம்.

  1. முதலில் யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அங்கு டவுன்லோடு ஆதார் என்பதை கிளிக் செய்யவும். அது உங்களை மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும்
3. இங்கு யுஐடிஏஐ அமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் இ-ஆதார் டவுன்லோடு செய்ய முடியும்.

முதல் வழிமுறை: என்ரோல்மெண்ட் நம்பர் பயன்படுத்துவது ஆகும்.உங்கள் முழு பெயர் மற்றும் பின் கோடு ஆகிய விவரங்களுடன், உங்களுக்கான 28 எண் இலக்க என்ரோல்மெண்ட் நம்பர் உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் ஆதார் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி ?

இதை செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். OTP பாஸ்வேர்டுக்கு பதிலாக TOTP பாஸ்வேர்டு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த TOTP பாஸ்வேர்டு வேண்டும் என்றால் மொபைல் ஆதார் அப்ளிகேஷனில் ரிஜிஸ்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது வழிமுறை: ஆதார் எண் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதில், உங்கள் முழு பெயர் மற்றும் பின் கோடு ஆகிய விவரங்களுடன் 12 இலக்க ஆதார் எண் குறிப்பிட வேண்டும். இந்த நடைமுறையிலும் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிடுவதன் மூலமாகவும் அல்லது TOTP உள்ளிடுவதன் மூலமாகவும் இ-ஆதார் பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!