தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் மூலம் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - ஆன்லைன் மூலம் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?
தமிழக அரசு வேலைவாய்ப்பு - ஆன்லைன் மூலம் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?
தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஆன்லைன் மூலம் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவகத்திற்கு செல்லமால் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே கல்வித் தகுதிகளை பதிவு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

கல்வித்தகுதி பதிவு:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் கல்வித்தகுதிகளை பதிவு செய்வர். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து வேலைவாய்ப்பை பதிவு செய்வர். அதன் பிறகு 10ம் வகுப்பு முடித்தவுடன் அந்ததந்த பள்ளி நிர்வாகமே பதிவு செய்து தருகின்றனர். அதன் பிறகு வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியம். அதுவும் இப்போது ஆன்லைன் மூலமாகவே இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் அறிவிப்பு!

அதே போல் தற்போது வேலைவாய்ப்பு பதிவில் கல்வித்தகுதிகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் எளிதாக வீட்டிலிருந்தே கல்வித்தகுதிகளை பதிவு செய்து விடலாம். இணையதளத்தில் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை:
  • முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இந்த இணையத்தளத்தில் User ID Registration என்பதை கிளிக் செய்து I Agree என்று கொடுக்கவும்.
  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும் அதில் உங்கள் சுய விவரங்களை பதிவிட்டு புதிய ID யை உருவாக்க வேண்டும்.
  • புதிய ID யில் Personal Details, Contact Details, Qualification Details, Technical Details ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number கிடைக்கும்.

TN Job “FB  Group” Join Now

  • Register Number உள்ளீடு செய்து Qualification Details என்பதை கிளிக் செய்து அதை பூர்த்தி செய்து Add கொடுக்கவும். அடுத்த படியாக அனைத்து விவரங்களையும் Save செய்யவும்.
  • அதன் பிறகு Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • இதில் ஏதேனும் தவறு இருந்தால் Modify Contact என்பதை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!