தமிழக தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் – அதிகாரிகள் விளக்கம்!

1
தமிழக தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் - அதிகாரிகள் விளக்கம்!
தமிழக தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் - அதிகாரிகள் விளக்கம்!
தமிழக தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் – அதிகாரிகள் விளக்கம்!

கொரோனா பரவலின் விளைவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

பாடப்புத்தகங்கள் விநியோகம்:

தமிழகத்தில் உள்ள சுமார் 13,000 தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை முதல் இரண்டாம் நிலை வரை பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களால் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத சூழலில், பள்ளி நிர்வாகமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து வரும் 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் சம்பளம் வழங்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிப்போம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி!

இவை ஒரு புறம் இருக்க மறுபக்கத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில், பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான நோடல் ஏஜென்சி 3 கோடிக்கு மேற்பட்ட பாடப்புத்தகங்கள் தயாராக உள்ள நிலையில் புத்தகங்களை வாங்குவதற்கு தனியார் பள்ளிகளில் போதுமான நிதி இல்லை. இது குறித்து கே.ஆர். டி.என். கல்விக்குழுமம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்த குமார் கூறுகையில், ‘தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு நிலுவை தொகையை செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களிடம் தவணை முறையில் கட்டணம் வசூலிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் பல பள்ளிகளில் மின்சார கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலை இருந்தது.

TN Job “FB  Group” Join Now

மேலும் 2020 ஆம் ஆண்டிற்கான RTE கட்டணத்தை கூட அரசு திருப்பிச் செலுத்தவில்லை. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழக பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நிதி நெருக்கடியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வட்டி இல்லா கடன்களை அரசு வழங்க வேண்டும் என்று தமிழக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் திரு. டி.சி. இளங்கோவன் கூறியுள்ளார். இந்த நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Worst private schools…last year govt said 75% fees collection and they collected fully…if we refuse to give money means they didnt share kids online links…its happening everywhere ,all over chennai….
    This year private schools brilliantly planned and increased the school fees almost 25% to 30 % in new academic year because In future if govt again said to collect 75%means it’s easy for them to collect frm us….worst tactics

    Minimum expense with maximum profit….(COVID situation )

    Poor parents and teachers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!