தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் – மார்ச் மாத பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் - மார்ச் மாத பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் - மார்ச் மாத பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் – மார்ச் மாத பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

தமிழகத்தில் நியாய விலைக்கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்ச் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர்.

ரேஷன் பொருள் கிடைப்பதில் சிக்கல்:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் ஆவணம், குடும்ப அட்டை ஆகும். இந்த ரேஷன் கார்டு மூலம் சாமானிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்த அனைத்து சலுகைகளையும் அரசு தற்போது அளித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விழுப்புரத்தில் (பிப்.27) நேற்று கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்த ஆயத்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆயத்தக் கூட்டம் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மாநில இணைச் செயலா் சேகர், கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் தரமற்ற பொருட்களுக்கு விற்பனையாளர் மீது எடுக்கப்படும் பணியிடை நீக்க நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

இதனை தொடர்ந்து மார்ச் 7 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த நகைகளுக்கான வட்டி உள்ளிட்டவைகளை அரசு வழங்கிய பிறகு, நகைகளை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மார்ச் மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here