விஜய் டிவி “சூப்பர் சிங்கர் 8” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரியங்கா – அவரே வெளியிட்ட வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "சூப்பர் சிங்கர் 8" நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரியங்கா - அவரே வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி “சூப்பர் சிங்கர் 8” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரியங்கா – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இறுதி சுற்றுவரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்த ப்ரியங்கா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் பிரியங்கா:

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் ராஜு மக்களின் அதிகமான வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதன்முறையாக ரசிகர்களிடம் லைவில் பேசி இருக்கிறார். அப்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது பெயர் கெட்டுவிடும் போகாதீங்க என சொன்னார்கள்.

மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ஷாக் ரிப்போர்ட்!

ஆனால் தற்போது நான் சென்று வந்து இருக்கிறேன். எனக்கு எந்த கேட்ட பெயரும் வரவில்லை என சொல்கிறார். பின் பிக்பாஸ் ஓடிடி யில் நல்ல போட்டியாளர்கள் தான் வருவார்களாம். அதனால் என்னை கூப்பிடவில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் CWC சீசன் 3-ல் ஆங்கராக வருவீர்களா என்ற கேள்விக்கு அதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறார். கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென வருத்தப்பட்ட அவர் நானும் வாழ்க்கையில் நிறைய ஏமாந்து இருக்கேன்.

லவ் பெய்லியர் கூட நடந்துருக்கு. ஆனால் தன்னை தானே காதலிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். அபிஷேக் பற்றி பேசிய அவர் அவனை பார்த்து நான் பல இடங்களில் வியந்து இருக்கேன். ஆனால் அவனை ஏன் வெளியேற்றினார்கள். அதுவும் இரண்டு முறை ஏன் வெளியேறினார் என தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். பின் ராஜூ பற்றி சொன்ன அவர் வீட்டில் எமோஷனல் இல்லாமல் இருந்த அவர் தன் மனைவியை பார்த்ததும் நவரசத்தையும் காட்டினான் என நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்த தாமரை செல்வி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பது குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் சிலர் என் மீது கோவப்பட்டார்கள் ஆனால் நான் நானாக தான் இருக்க முடியும் நிகழ்ச்சிக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது என சொல்லி அந்த லைவ்வை அவர் முடித்து இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!