வளைகாப்பு முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி பிரியங்கா – ரசிகர்கள் ஹாப்பி!

0
வளைகாப்பு முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி பிரியங்கா - ரசிகர்கள் ஹாப்பி!
வளைகாப்பு முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி பிரியங்கா - ரசிகர்கள் ஹாப்பி!
வளைகாப்பு முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி பிரியங்கா – ரசிகர்கள் ஹாப்பி!

விஜய் தொலைகாட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட கலக்கல் ராணியாகவும் வலம் வரும் ஆங்கர் பிரியங்கா தனது ரசிகர்களை குஷியாக்கும் விதமாக ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா:

பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கெனவே பேர் பெற்ற விஜய் டிவி ஒவ்வொரு நாளும் மக்களை என்டர்டைன் செய்வதற்காகவே பல புது புது ஷோக்களை ஒளிபரப்பாக்கி வருகிறது. சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டங்கள் உள்ளதோ அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி, அவரது காமெடி பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் மக்கள் மனதில் சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தை பெற்றவர் என்றால் அது பிரியங்கா தான்.

பல தடைகளை தாண்டி சக்தியுடன் தனியாக பேசிய வருண் – “மௌன ராகம் 2” சீரியல் இன்றைய எபிசோட்!

ஆப் ஸ்க்ரீனிலும் சரி! ஆன் ஸ்க்ரீனிலும் சரி! இரண்டிலுமே படு லூட்டியாகவும், மா.கா.பா ஆனந்த் உடன் அடிக்கும் கமெண்டுகளும் பார்ப்பதற்கு டாம் அண்ட் ஜெர்ரி போல பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும். ஆங்கராக இருந்த பிரியங்கா கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு ராஜுவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவருக்கு நல்ல பிரபலத்தை வாங்கி கொடுத்த சூப்பர் சிங்கர் ஷோவை மைனா நந்தினி நடத்தி வந்தார்.

Exams Daily Mobile App Download

அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார். தற்போது மற்றொரு புதிய ஷோவாகிய பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ஆங்கராக மாஸ் காட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான பாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா அவரது தம்பி ரோகித்துக்கு மகள் பிறந்துள்ளதை தெரிவிக்கும் விதமாக ரோகித் மனைவியின் வளைகாப்பு நிகழ்வில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ஆண்டி கிட்ட வா மா’ என பதிவிட்டு, ரசிகர்களுக்கு குட் நியூஸ் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here