‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா – வைரலாகும் வீடியோ!

0
'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா - வைரலாகும் வீடியோ!
'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா - வைரலாகும் வீடியோ!
‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடித்த கையோடு ஒரு லைவ் சேட்டின் மூலம் ரசிகர்களை சந்தித்திருக்கும் பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் தனது அனுபவங்கள், சக போட்டியாளர்கள், அடுத்த ப்ராஜக்ட் குறித்து மனம் திறந்துள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் பிரியங்கா

மக்களின் பேராதரவுடன் சுமார் 106 நாட்களாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதியுடன் நிறைவு பெற்றது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் ராஜு ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்றார். இதனுடன் ராஜுவிற்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் ரன்னர் ஆக அறிவிக்கப்பட்டவர் விஜே பிரியங்கா.

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகி விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்த ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!

ஆரம்பம் முதலே ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் அனைவரையும் கலாய்த்து மக்களை மகிழ்வித்து வந்த பிரியங்கா எப்படியாவது முதல் இரண்டு இடங்களை பெறுவார் என்று பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. அதே போல ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் ரன்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரியங்கா. இப்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்த கையோடு ரசிகர்களை ஒரு லைவ் சேட்டின் மூலம் சந்தித்து பிக் பாஸ் குறித்து பல ஸ்வாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் லைவ் வீடியோவில், ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பல ஸ்வாரசியமான போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கண்டிப்பாக இது மக்களை மகிழ்விக்கும். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ப்ரோமோ பார்த்தேன். இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக வேண்டும் என்று எல்லாரும் என்னிடம் கேட்கிறார்கள். அதை நிகழ்ச்சி குழுவினரிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என்று உற்சாகமாக பதிலளித்திருக்கிறார்.

பாக்கியாவை எதிர்த்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

தொடர்ந்து நான் என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். காதல் தோல்வியும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஃசெல்ப் லவ் என்று ஒன்று இருக்கிறது. அது தான் எல்லாருக்கும் முக்கியம் என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அடுத்ததாக ‘பிக் பாஸ்’ சீசன் போட்டியாளர்கள் குறித்து பேசும் போது, தாமரை இறுதி போட்டிக்கு முன்னால் வெளியே போனது வருத்தமளிக்க கூடியதாக இருந்ததாகவும், நிகழ்ச்சி முடித்து ராஜு அவரது மனைவியுடன் உடன் சென்று விட்டதாகவும் அவர் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here