வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா – ரசிகர்கள் வாழ்த்து!

0
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா - ரசிகர்கள் வாழ்த்து!
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா - ரசிகர்கள் வாழ்த்து!
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா – ரசிகர்கள் வாழ்த்து!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா தற்போது வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். இந்த தகவலை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி படத்தை வென்றவுடன், முதன் முதலாக தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை ஆரம்பித்த நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2003ம் ஆண்டில் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார்.

தனது கணவரை பற்றி முதன்முறையாக மனம் திறந்த “பிக் பாஸ்” பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்ட பிரியங்கா க்ரிஷ் மற்றும் டான், மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த வகையில் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல், மாடல், பாடகி என பன்முகத்திறமை கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இது தவிர உலகளவில் பிரபலமான டைம் பத்திரிகை, நடிகை பிரியங்கா சோப்ராவை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பெயரிட்டது. தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை பிரியங்காவை உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் சேர்த்தது. இப்படி உலகளவில் தன்னை நிலை நாட்டி கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பாக அமெரிக்காவில் செட்டில் ஆகி பல்வேறு ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை பிரியங்கா தனது 39 வயதில் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த வகையில் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்து கொண்ட பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸ் தம்பதியினர் இந்த மகிழ்ச்சியான நிகழ்வை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் சுஜிதாவின் நியூ கெட்டப் – வைரலாகும் வீடியோ!

இது குறித்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் ஷேர் செய்திருந்த நடிகை பிரியங்கா, ‘நாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டோம் என்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். இந்த சந்தோஷமான தருணத்தில் நாங்கள், எங்கள் குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது முதல் குழந்தையை வரவேற்றிருக்கும் நடிகை பிரியங்கா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதியினருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here