தமிழக அரசு பள்ளிக்கு பெற்றோர் சார்பில் தனியார் ஆசிரியர் நியமனம் – மாணவர்கள் தோல்வி எதிரொலி!
தமிழக 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த பின்னர் அவர்களின் பெற்றோர் சார்பில் பள்ளிக்கு தனியார் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தனியார் ஆசிரியர்:
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் மே 19ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறையில் வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி குன்னன்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 40 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கு வேலை வாய்ப்புகள் இதோ!
அதில், 24 பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் தான் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாகவும், இதனால் ஆசிரியர்கள் சார்பில் ரூ.15,000 ஊதியத்தில் தனியார் ஆசிரியர் மாணவர்களுக்கு தற்போது நியமிக்கப்பட்டு துணை தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் தகுந்த ஆசிரியர்களையம், கூடுதல் வகுப்பறைகளையும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.