தமிழகத்தில் நாளை (ஜூலை 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை (ஜூலை 8) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் நாளை (ஜூலை 8) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு உடன் பணி நியமனம் வழங்கப்படும். இந்த முகாமிற்கு வரும் போது இளைஞர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்திற்கு நாளை காலை 10 மணிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 254510 அல்லது – 6379268661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!