தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

தாராபுரத்தில் வருகிற நவம்பர் 30 அன்று 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை வேலையில்லா பட்டதாரிகள் அனைவரும் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெறலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

கொரோனா கால கட்டத்தில் பல பேர் வேலையின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியன இணைந்து நடத்துகின்றன. இந்த மாபெரும் முகாம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் பங்கு பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஈடுசெய் விடுப்பு விளக்கம்!

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பட்டய படிப்பு முடித்ததவர்கள், செவிலியர், ஐடிஐ முடித்தவர்கள், தொழிற் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் துறையில் பட்டம் வென்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் போன்ற அனைத்து விதமான தகுதியுடையவர்களும் பங்கு பெறலாம். மேலும் இந்த முகாமில் பங்கு பெற நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அத்துடன் இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்களுக்கான பதிவுகள், மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள், மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதேபோல் மகளிர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 0421-2999152, 94990-55944 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் இதன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!