தமிழகத்தில் மே 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் தற்போது பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓசூரில் வருகிற 22ம் தேதி அன்று 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான மேலும் சில தகவல்களை பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தது. இதையடுத்து பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். மேலும் அரசாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – வெளியான ஷாக் அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 22ம் தேதி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மிடுகரப்பள்ளி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை அமைச்சா் சி.வி கணேசன் ஆய்வு செய்தார். இவர் மத்திகிரி மாவட்ட வன அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான சி.வி கணேசன் கூறியதாவது, தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதுவரை தமிழகத்தில் 57 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 74 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் வேலைவாய்ப்புத் துறை சாா்பாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரியை தொடர்ந்து ஓசூரில் வருகிற 22ம் தேதி அன்று 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.