தமிழகத்தில் டிச 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் டிச 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் டிச 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் டிச 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் டிசம்பர் 29ம் தேதி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப அம்ரித்
தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பின்தங்கியது. இதன் காரணமாக பலர் வேலையிழந்தனர் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்போது பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். அதன் வகையில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளிவர தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் பயன் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை பகுதியில் டிசம்பர் 29ம் தேதி தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் சேரிங் கிராஸ், கார்டன் சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பாக நடைபெற உள்ளது. டிசம்பர் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார். இம்முகாமில் அதிகமான முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். இதில் 8ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அதிகமான வேலை ஆட்கள் தேவைப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Post Office இல் மாதம் ரூ.1500 முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில் பதிவு செய்யவும் மற்றும் வேலை தேடுபவர்கள் அந்த அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் முன்பதிவும் செய்ய வேண்டும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0423-2444004 அல்லது 96553 94765 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!