தமிழகத்தில் ஏப்ரல் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

0
தமிழகத்தில் ஏப்ரல் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
தமிழகத்தில் ஏப்ரல் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
தமிழகத்தில் ஏப்ரல் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதில் இருந்து ஏராளமான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது திருவண்ணாமலையில் வருகிற ஏப்ரல் 22ம் தேதி அன்று தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தேவையான முழு விபரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வேலையில்லா நிலை அதிகரித்து வந்தது. தற்போது வேலையில்லா நிலையை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பெரும்பாலானோர் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 22ம் தேதி அன்று திருவண்ணாமலையில் தனியார் துறைகள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. இதில் தங்கள் நிறுவனத்தில் உள்ள சுமார் 5000 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதி மற்றும் விருப்பத்துக்கு ஏற்ற பணியினை தேர்வு செய்து கொண்டு வேலைகளை பெறலாம். இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதில் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல், நா்சிங், முதுநிலை மேலாண்மை உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாம் வருகிற ஏப்ரல் 22ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் தொடங்க உள்ளது. அத்துடன் இதில் கலந்த கொள்ள நினைப்பவர்கள் தங்களின் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஜாதிச்சான்று, கல்வித்தகுதி உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். மேலும் இம்முகாம் தொடர்பான மேலும் சில கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 04175-233381 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here