தமிழகத்தில் டிச.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 19.12.2021 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து மாத வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்து நோக்கில் அரசு அந்தந்த மாவட்டங்களில் மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மேலும் பணியிடங்களை பொறுத்து தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வேலை இழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

Post Office இல் ரூ.1500 முதலீடு செய்தால் 4.5 லட்சம் வரை ரிட்டன்ஸ் – மாதாந்திர வருமான திட்டம்!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெறவுள்ளது. டிசம்பர் 19ம் தேதி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளனர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, நர்சிங் பயிற்சி, கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம்.

TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பதவிகள், கல்வித்தகுதி!

முகாமில் பங்கேற்பவர்கள் படித்த, வேலைவாய்ப்பற்றோர்கள் உரிய கல்வித்தகுதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவும் செய்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9787882961, 9444094128 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!