தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

0
தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த முகாமில் 20,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, இந்த முகாமில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. மேலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு, கலை அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த அனைவருமே கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு துறையின் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா், கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள வள்ளலாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை அறிய விரும்பினால் 04142-290039, 9499055908 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here