தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணாதீங்க!

0
தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கையை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் வெளியிட்டுள்ளார்.

TCS ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை!

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலூரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 3ம் தேதி அன்று காலை 10 மணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அத்துடன் டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 18 முதல் 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தனியார்த்துறை நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தொகுப்பு, புகைப்படம் மற்றும் தங்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here