தமிழகத்தில் ஜூலை 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கம் – டீசல் விலையை குறைக்க கோரிக்கை!

1
தமிழகத்தில் ஜூலை 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கம் - டீசல் விலையை குறைக்க கோரிக்கை!
தமிழகத்தில் ஜூலை 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கம் - டீசல் விலையை குறைக்க கோரிக்கை!
தமிழகத்தில் ஜூலை 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கம் – டீசல் விலையை குறைக்க கோரிக்கை!

தமிழகத்தில் எதிர்பாராத விதமாக உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பெட்ரோல் விலை குறைப்பு

கொரோனா 2 ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்துகள் 27 மாவட்டங்களில் மட்டும் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி நேற்று (ஜூன் 28) முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கம் மீண்டுமாக துவங்கியுள்ளது. அதன் படி பேருந்துகள் அனைத்தும் 50% இருக்கை வசதிகளுடன், சமூக இடைவெளியை பின்பற்றி தற்போது இயங்கி வருகிறது.

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது – அமைச்சர் உறுதி!

ஆனால் தனியார் பேருந்துகளை பொருத்தளவு, 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தர்மராஜ் கூறுகையில், ‘தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி ஜூலை 1 முதல் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தனியார் பேருந்துகளின் இயக்கம் தற்போது துவங்கியுள்ளது. பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வரத்து குறைவாக உள்ளது. மறு பக்கத்தில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தமிழகத்தில் அரசு பேருந்து இயக்க வேலை வாய்ப்பு வழங்குக……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!