இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் – அறிவிப்பு வெளியீடு!

0
இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் - அறிவிப்பு வெளியீடு!
இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் - அறிவிப்பு வெளியீடு!
இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் – அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேசியக் கொடியை பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தேசிய கொடி:

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தாண்டு நாட்டின் 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15ஆம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

எப்போதும் சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம் பிறகு சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது தான் சட்ட நடைமுறை தற்போது அரசு வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து தேசியக் கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இரவிலும் பறக்க விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை வீடுகள்தோறும் ஏற்றுவது மக்கள் இயக்கமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

மீன்வள நிறுவன வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் மூவர்ண கொடியை காட்சிப்படமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய மூவர்ண கொடி குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மூவர்ண தேசிய கொடியை கொண்டாடும் இயக்கத்துக்கு நம் தேசம் தயாராகி வருகிறது. மேலும் மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது முயற்சிகளுக்கு நமது தேசம் என்றென்றும் கடமை பட்டிருக்கும். இந்த மூவர்ண கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு தேச முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!