நாட்டின் ராணுவம் மேன்மை அடைந்து வருவதாக பிரதமர் பெருமிதம் – கார்கில் வீரர்களுடன் தீபாவளி!

0

நாட்டின் ராணுவம் மேன்மை அடைந்து வருவதாக பிரதமர் பெருமிதம் – கார்கில் வீரர்களுடன் தீபாவளி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீபாவளி பண்டிகையை நாட்டின் ராணுவ வீரர்களுடன் சிறப்பிக்கும் விதமாக உரையாடியுள்ளார். இந்த உரையில் ராணுவம் மேன்மை அடைந்து வருவதாக கூறியுள்ளார்.

பிரதமர் பெருமிதம்:

வழக்கமாக பிரதமர் தீபாவளி பண்டிகையை நாட்டின் ராணுவ வீரர்களுடன் தான் கொண்டாடுவார். நடப்பு ஆண்டில் கார்கில் வீரர்களுடன் தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் உரையாடியுள்ளார். அந்த உரையில் மிகவும் உணர்வு பூர்வமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்தியா எப்போதும் உலக அமைதியை தான் ஆதரிக்கும் என்றும், வன்முறையை எதிர்ப்பதாகவும், அதற்காக எங்களிடம் வலிமை இல்லாமல் இல்லை என்றும், நமது நாட்டின் படையினருக்கு திறமையும் வியூகமும் உள்ளது. பதற்றத்தை உருவாக்க முயல்பவர்களுக்கு எப்படி தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பது ராணுவத்திற்கு தெரியும் என்று கூறினார்.

தீபாவளி என்பது பயங்கரவாதத்தின் முடிவின் திருவிழா, இதை தான் கார்கில் போர் செய்தது. கார்கில் ஒருபோதும் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்றும் கூறினார். அத்துடன், ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகள் தன்னம்பிக்கையை அதிகரித்து வருவதையும் அவர் பாராட்டினார். கிட்டத்தட்ட 400 ஆயுதங்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், சூப்பர்சோனிக் ஆயுதங்கள் முதல் லைட் வெயிட் ஹெலிகாப்டர்கள் வரை இந்தியாவின் ராணுவ பலம் அதிகரித்து வருகிறது.

இன்று, நாடு தனது சொந்த தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில், ஆயுதப் படைகளுக்குள் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்றும், நாரி சக்தி (பெண்கள் சக்தி) நமது ஆயுதப் படைகளை பலப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!