பள்ளிகளில் ஆரம்ப பள்ளி சேர்க்கை வயது உயர்வு – முக்கிய உத்தரவு வெளியீடு!

0
பள்ளிகளில் ஆரம்ப பள்ளி சேர்க்கை வயது உயர்வு - முக்கிய உத்தரவு வெளியீடு!
பள்ளிகளில் ஆரம்ப பள்ளி சேர்க்கை வயது உயர்வு - முக்கிய உத்தரவு வெளியீடு!
பள்ளிகளில் ஆரம்ப பள்ளி சேர்க்கை வயது உயர்வு – முக்கிய உத்தரவு வெளியீடு!

ஆர்டிஇ சட்டம், 2009ன் படி, இந்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் என்இபி 2020ன் படி, ஜூன்1 ஆம் தேதிக்குள் குழந்தைகள் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர, ஆறு வயது நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என கர்நாடக பொது கல்வி துறை ஆணையர் விஷால் ஆர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சேர்க்கை வயது

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வுவுகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு, 2022- 2023 கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் வயதை 5 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த விதி வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய உத்தரவில், தொடக்கப் பள்ளியில் சேரும் குழந்தைக்கு அந்த கல்வியாண்டின் ஜூன் 1 ஆம் தேதியின் படி ஆறு வயது இருக்க வேண்டும். இருப்பினும், முன் தொடக்கப் பள்ளிகளுக்கான கட்-ஆஃப் வயது குறித்து உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

Exams Daily Mobile App Download

இருப்பினும், சில ஆர்வலர்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே முன் தொடக்க வகுப்புகள் இருப்பதால், சேர்க்கை வயதை அதிகரிப்பது குழந்தைகளை தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளக்கூடும் என்று அஞ்சுகின்றனர். மேலும் வளர்ச்சிக் கல்வியாளர் நிரஞ்சனாராத்யா வி.பி.தி இந்து கூறுகையில், “அரசுப் பள்ளிகளில் முன் தொடக்க வகுப்புகள் இல்லாத நிலையில், இது போன்ற விதிகள், அத்தகைய பள்ளிகளின் வலிமையை மேலும் குறையச் செய்யும். எனவே, அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கான வயது 5+ ஆக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here