ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் – வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

0
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் - வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் - வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் – வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டோல் வரியின் கடுமையான உயர்வுக்குப் பிறகு ஏப்ரல் 1 முதல் சாலைப் பயணங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும். அந்த வகையில் உயர்த்தப்பட்ட டோல் வரியால் பயணிகள் இனி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற விவரங்களை இப்போது காணலாம்.

டோல் வரி உயர்வு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்க வரியை ரூ.10 லிருந்து ரூ.65 ஆக உயர்த்தி சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் ஒரு வழிக்கு (one way) வணிக வாகனங்களுக்கு இனி ரூ.65 மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்ட இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் நாளை (ஏப்ரல்.1) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ‘ஏப்ரல் 1 முதல் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது கொஞ்சம் அதிகமாகும்.

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

ஏனென்றால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கவரியை ரூ.10 லிருந்து ரூ.65 ஆக உயர்த்தியுள்ளது. அதன் படி, வணிக வாகனங்களுக்கு ரூ.65 மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ஒரு வழிக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2022-23 நிதியாண்டுக்கான சுங்க வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறிய NHAI திட்ட இயக்குநர் என்என் கிரி ‘டெல்லியை இணைக்கும் நெடுஞ்சாலைகளில், கார்கள் மற்றும் ஜீப்புகள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் ஒரு வழிக்கு ரூ.65 செலுத்த வேண்டும்’ என்றுதெரிவித்துள்ளார். இப்போது டோல் வரி உயர்வு காரணமாக பயணிகள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • முதலில், 59.77 கிமீ டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில், பயணிகள் 10% கூடுதல் சுங்க வரி செலுத்த வேண்டும்.
  • சராய் காலே கான் முதல் காசி டோல் பிளாசா இறுதி வரையிலான விரைவுச் சாலையில் கார் மற்றும் ஜீப்பில் பயணிப்பவர்கள் ரூ.140க்கு பதிலாக ரூ.155 செலுத்த வேண்டும்.
  • சராய் காலே கான் முதல் ரசூல்பூர் சிக்ரோட் பிளாசா வரை பயணிகள் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

  • இந்திரபுரத்தில் இருந்து காசி, போஜ்பூர் மற்றும் ரசூல்பூர் சிக்ரோடுக்கு பயணிகள் முறையே ரூ.105, ரூ.80 மற்றும் ரூ.55 செலுத்த வேண்டும்.
  • குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ்வே (கேஎம்பி) வழியாகச் செல்வதும் நாளை முதல் விலை உயர்ந்ததாக இருக்கும்.
  • டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெர்கி தௌலா டோல் பிளாசாவில் டோல் வரி 14 சதவீதம் அதிகரிக்கும்.
  • அதே வேளையில், கேஎம்பியில் 8 முதல் 9 சதவீதம் அதிகமாக இருக்கும்.
  • கெர்கி தௌலா டோல் பிளாசாவில் பெரிய வணிக வாகனங்கள் (டிரக்குகள், பேருந்துகள் மற்றும் ஒத்த வாகனங்கள்) ஒரு பயணத்திற்கு ரூ.205க்கு பதிலாக ரூ.235 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • கார், ஜீப்புகளுக்கான வழக்கமான கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆகவும், மினிபஸ் வகை வாகனங்களுக்கு ரூ.100க்கு பதிலாக ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது சுங்கச்சாவடிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, டோல் பிளாசாக்களை அகற்ற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதற்கு பதிலாக ஆண்டுதோறும் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்று உள்ளூர்வாசிகள் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!