ஜூலை 1 முதல் Hero நிறுவன இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

0
ஜூலை 1 முதல் Hero நிறுவன இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஜூலை 1 முதல் Hero நிறுவன இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஜூலை 1 முதல் Hero நிறுவன இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றின் விலையை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டர் விலை உயர்வு:

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது, கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம், உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் வாகனங்கள் விலை ரூ.3000 வரை விலையை உயர்த்துவதாக ஹீரோ மோட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆட்டோமொபைல் துறையில் வாகன உற்பத்திற்கான மூலதன பொருட்கள் விலையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பரவி வந்த கொரோனாவின் காரணமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடுத்தர குடும்பத்தினரும், ஏழை மக்களும் இரு சக்கரவாகனத்தை ஓட்டி வருகிறார்கள். இந்த சூழலில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் மாடலுக்கு தகுந்தார்போல் விலையை உயர்த்துவது என்ற அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் “கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம், உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் வாகனங்கள் விலை ரூ.3000 வரை விலையை உயர்த்துகிறோம். இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்குவரும்” எனத் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து எந்தவிதமான விளக்கமும் ஹீரோ மோட்டார்ஸ் அளிக்கவில்லை. சந்தையில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் 100 சிசி முதல் 200 4வி மாடல் வரை விற்பனை செய்கிறது. இதில் ஹெச்எப் 100 மோட்டார் சைக்கிள் ரூ.51,450ஆகவும், எக்ஸ்பல்ஸ் 2004வி மாடல் ரூ.1.32 லட்சமாகவும் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!