இந்தியாவில் மருந்துகளின் விலை மாற்றம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
இந்தியாவில் மருந்துகளின் விலை மாற்றம் - முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் மருந்துகளின் விலை மாற்றம் - முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் மருந்துகளின் விலை மாற்றம் – முக்கிய தகவல் வெளியீடு!

இந்தியாவில் சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் மருந்துகளின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது விலை மாற்றம் அடைந்துள்ள மருந்துகளையும் அதன் விலையையும் இப்பதிவில் காண்போம்.

மருந்து பொருட்கள்:

இந்தியாவில் சில நிறுவனங்களின் மருந்து பொருட்களின் காப்புரிமை காலாவதியாக உள்ளது அதனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை 2013 ன் படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றி அமைத்துள்ளது. இது தொடர்பாக மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் ‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய்த்தொற்றுகள், கண் தொடர்பான நோய்கள், அதிக கொழுப்பு மாத்திரை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களா? உங்களுக்கான அறிவிப்பு!

அதே போல மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சிடாக்ளிப்டின் மெட்ஃபோர்மின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் லினாக்ளிப்டின் + மெட்ஃபாமின் ஆகியவற்றின் கலவையின் ஒவ்வொரு மாத்திரையின் விலையை ரூ.16 முதல் ரூ.21 வரை குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மெர்க் ஷார்ப் அண்ட் டோம் (எம்எஸ்டி)’ சிட்டாக்ளிப்டைன் மீதான காப்புரிமை கடந்த மே மாதம் காலாவதியாகி விட்டது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து லினாக்ளிப்டின்+மெட்ஃபாமின் மீதான காப்புரிமையும் அடுத்த மாதம் காலாவதியாகிவிடும். அதனால் இந்த மாத்திரைகளின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. மேலும் அலர்ஜி, சளி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், பினைல் ஃபிரைன், ஹைட்ரோகுளோரைடு, காஃபின் மற்றும் டிபன் ஹைட்ராமென் ஹைட்ரோகுளோரைடு ஆகியவற்றின் விலை ரூ.3.73 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்டிபயாடிக் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அமோக்ஸிசிலின் மற்றும் பொட்டாசியம் கிளாவுலனேட் சஸ்பென்ஷன் சிரப்பின் விலை ரூ.163.43 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!