Airtel, Jio & Vi நிறுவனங்களின் ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம்!

0
Airtel, Jio & Vi நிறுவனங்களின் ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம்!
Airtel, Jio & Vi நிறுவனங்களின் ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம்!
Airtel, Jio & Vi நிறுவனங்களின் ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம்!

ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி 3 ஜிபி வரை வழங்க கூடிய பிரபல திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டங்கள் ரூ.500 க்கும் குறைவாகவே உள்ளது.

அதிக பலன் தரும் திட்டங்கள்:

நாட்டின் முக்கிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் Vi நிறுவனங்கள் தற்போதைய ஊரடங்கு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய திட்டங்களை வழங்கி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளினால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் குறைந்த விலையில் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது.

ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் கால்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. மேலும், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல்லின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது.

Vi ன் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்:

Vi இன் ரூ.401 திட்டத்தில், 3 ஜிபி டேட்டா தினமும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்கள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்துடன் 16 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் ஒரு வருடம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா மற்றும் வார இறுதியில் பயன்படுத்தாத டேட்டாவையும் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் 90 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், தினசரி வாடிக்கையாளர்கள் 3 ஜிபி டேட்டா பெறுவார்கள். இது தவிர, 6 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கிறது. ஒரு வருடம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

Vi இன் ரூ.405 ப்ரீபெய்ட் திட்டம்:

Vi இன் ரூ.405 ப்ரீபெய்ட் திட்டம் 90 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. கூடுதலாக 6 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்கள் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம், ZEE5 பிரீமியத்திற்கான சந்தா 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!