பிரதமரின் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பிரீமியம் கட்டணம் உயர்வு!

0
பிரதமரின் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பிரீமியம் கட்டணம் உயர்வு!
பிரதமரின் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பிரீமியம் கட்டணம் உயர்வு!
பிரதமரின் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பிரீமியம் கட்டணம் உயர்வு!

இந்திய குடிமக்களுக்காக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரு காப்பீடு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கு பிரீமியம் கட்டணம் உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பிரீமியம் கட்டணம்:

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரு திட்டங்களும் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015-ம் ஆண்டு ஏழை மக்கள் மற்றும் கடைநிலை மக்கள் காப்பீடு பெறுவதற்காக துவங்கப்பட்டது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 18 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து இந்தியர்களும் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு PMJJBY திட்டத்தின் மூலமாக நிதி உதவி வழங்கப்படுகிறது.

Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – இன்னும் 4 நாட்கள் மட்டும்!

PMJJBY திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.330 முதல் செலுத்திக் கொள்ளலாம். ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெற்று பயனடையலாம். இந்த திட்டத்தின் கீழ் சேர விரும்புபவர்கள் அருகிலுள்ள வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று PMJJBY பாலிசியை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபத்துக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் விபத்தில் இறந்துவிட்டால் பாலிசிதாரர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நிதித் தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் இந்த பாலிசியை பெற்று கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த திட்டத்தின் மூலமாக பாலிசிதாரர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2 லட்சமும், விபத்தினால் பாதி உடல் பாகங்கள் செயலற்று போனால் ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. PMJJBY திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ. 330 மற்றும் PMSBY திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ. 12 என மொத்தமாக ரூ. 342 பாலிசிதாரரின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும், PMJJBY திட்டத்திற்கான பீரிமியம் ரூ.330-லிருந்து ரூ.436 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் PMSBY திட்டத்திற்கான ப்ரிமீயம் ரூ.12-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீமியம் உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!