விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் ப்ரஜினிற்கு பதில் இந்த நடிகரா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "வைதேகி காத்திருந்தாள்" சீரியலில் ப்ரஜினிற்கு பதில் இந்த நடிகரா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் ப்ரஜினிற்கு பதில் இந்த நடிகரா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் இருந்து ப்ரஜின் விலக இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவருக்கு பதிலாக நடிகர் தினேஷ் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வைதேகி காத்திருந்தாள் ஹீரோ:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கடந்த மாதம் புதிய கதைகளத்துடன், “வைதேகி காத்திருந்தாள்” சீரியல் தொடங்கப்பட்டது. அந்த சீரியலில் வைதேகியாக நடிகை சரண்யா நடிக்கிறார். மேலும் ஹீரோவாக நடிகர் ப்ரஜின் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், இந்த சீரியலில் இருந்து ஹீரோவாக நடித்து வரும் ப்ரஜின் விலக இருப்பதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள் காரணமாக அவரால் சீரியலில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.

‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் சீரியலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் வேற வழி இல்லாமல் சீரியலில் இருந்து நான் விலகி இருக்கிறேன் நல்ல புராஜெக்ட். கூட ஒர்க் பண்ணினவங்க எல்லாருமே நல்லா பழகினாங்க. ஜாலியான யூனிட்தான். ஆனாலும் என்னால தொடர முடியாமப் போச்சுன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாக இருப்பதாக ப்ரஜின் சொல்லி இருக்கிறார். ப்ரஜினிற்கு பதிலாக அந்த சீரியலில் ஹீரோவாக யார் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் பிரஜினுக்குப் பதில் இனி இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் தினேஷ் நடிக்க இருப்பதாகவும், மேலும் ’சின்னத்தம்பி’ சீரியலில் நடித்த லோகேஷிடம் நடிக்க கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தினேஷ் விஜய் டிவியில் ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘புதுக்கவிதை’ ஆகிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். பிறகு விஜய் டிவியிலிருந்து வெளியேறி ‘பூவே பூச்சூடவா’, ‘நாச்சியார்புரம்’ என ஜீ தமிழ் சீரியல்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here