தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப் 25 செய்முறை தேர்வு – ஆசிரியருக்கு பணி ஆணை!

0
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப் 25 செய்முறை தேர்வு - ஆசிரியருக்கு பணி ஆணை!
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப் 25 செய்முறை தேர்வு - ஆசிரியருக்கு பணி ஆணை!
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப் 25 செய்முறை தேர்வு – ஆசிரியருக்கு பணி ஆணை!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதன் அடிப்படையில் செய்முறை தேர்வு தொடங்க இன்னும் 3 நாள் மட்டுமே உள்ளன.

செய்முறை தேர்வு தொடக்கம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து பிப்ரவரி 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை, எனவே நடப்பு கல்வி ஆண்டிலாவது பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வுகள் நடக்குமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் கண்டிப்பாக நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி பொது தேர்வுகள் நடக்கும் தேதி மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதிகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மார்ச் 2ம் தேதி வெளியிட்டார்

நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?

மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வில், 9 லட்சம் பேர் மற்றும் 11ம் வகுப்பில் 8.49 லட்சம், 12ம் வகுப்பில் 8.36 லட்சம் பேர் என மொத்தம் 25.85 லட்சம் பேர் பொது தேர்வுகள் எழுத உள்ளனர். இந்த வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், ஜூன் 17 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்தும் முன், செய்முறை தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி செய்முறை தேர்வு துவங்கும் என்றும், பிளஸ் 1க்கான செய்முறை தேர்வும் அதே தேதியில் தொடங்குகிறது.

ExamsDaily Mobile App Download

அதன்படி, 10ம் வகுப்பு செய்முறை தேர்வும் ஏப்.,25 ல் தொடங்குகிறது. இத்தேர்வு மே 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில், 325 பள்ளிகளை சேர்ந்த, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், 535 பள்ளிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு செய்முறை தேர்வு, வரும், 25 முதல், மே 2 வரை நடக்க உள்ளது. அந்தந்த பள்ளியிலேயே, மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வேறு பள்ளிகளில் இருந்து, தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று செய்முறை தேர்வு பணிக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அம்மாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில், ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here