2023 பட்ஜெட் : PPF வரம்பு உயர்வு – வைப்பு நிதி பயனர்களுக்கு ‘இந்த’ பலன் கிடைக்குமா?

0
2023 பட்ஜெட் : PPF வரம்பு உயர்வு - வைப்பு நிதி பயனர்களுக்கு 'இந்த' பலன் கிடைக்குமா?
2023 பட்ஜெட் : PPF வரம்பு உயர்வு - வைப்பு நிதி பயனர்களுக்கு 'இந்த' பலன் கிடைக்குமா?
2023 பட்ஜெட் : PPF வரம்பு உயர்வு – வைப்பு நிதி பயனர்களுக்கு ‘இந்த’ பலன் கிடைக்குமா?

இந்திய நாட்டின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் எந்த விதமான அறிவிப்புகள் வெளியாகும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், சில குறிப்பிட்ட துறையை சேர்ந்தவர்கள் தரப்பில் இருந்து சலுகைகள் குறித்த கோரிக்கையும் எழுந்துள்ளது.

2023 பட்ஜெட்:

ஆண்டுதோறும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்ற கூட்டத்தில் செய்யப்படுகிறது. அப்போது, நாட்டில் புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் மற்றும் சலுகைகள், விதிகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியாகும். இதனால் பட்ஜெட் தாக்கல் குறித்து எப்போதும் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.

பாஸ்ட்புட் பிரியர்களுக்கு செக் வைத்த கேரளா அரசு – கேட்டரிங் சேவைகளுக்கு உரிமம் கட்டாயம்!

Follow our Instagram for more Latest Updates

இதனால், TPF சார்பில் இருந்து மத்திய நிதி அமைச்சகத்திற்கு ஒரு சில கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதன்படி, இனி PPF ல் தற்போது வரை அதிகபட்ச உச்சவரம்பு 1.50 லட்சமாக மட்டுமே உள்ள நிலையில், இந்த உச்ச வரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், கூடுதலாக ‘ஸ்டாண்டர்ட் டிஸ்கஷன்’ தொகை தற்போது ரூ.50,000 ஆக உள்ள நிலையில், இந்த வரம்பினை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்துள்ளது.

‘ஸ்டாண்டர்ட் டிஸ்கஷன்’ தொகை என்பது நமது வருமானத்தில் இருந்து கழித்து விட்டு, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் வரம்பாகும். அதாவது நமது வருமானம் ஆண்டிற்கு 15 லட்சம் என்றால் அதில் இருந்து ரூ.50,000 கழித்து விட்டு ரூ.14.50 லட்சமாக மட்டுமே கணக்கிடப்படும். இதனால் வருமான வரி செலுத்துபவர்கள் சிறிதளவு பணத்தை சேமிக்க வாய்ப்பாக அமைகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!