நாளை (ஜூலை 30) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!
தேவகோட்டை துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளை பற்றி மின்வாரியம் முன்னதாக அறிவித்து விடுகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின்கம்ப தாங்கு கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகளவு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் திருப்பூர் மாவட்டம் – ஒரு பார்வை!
தேவகோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. இதனால் தேவகோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்பட இருக்கிறது. தேவகோட்டை டவுன், உதயாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணிகோட்டை பனங்குளம் ஆகிய பகுதிகள்.
TN Job “FB
Group” Join Now
மேலும் மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் சாத்தப்பன் அறிவித்துள்ளார்.