தமிழகத்தில் நாளை (செப்.7) எந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு விவரம்!

0
தமிழகத்தில் நாளை (செப்.7) எந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு விவரம்!
தமிழகத்தில் நாளை (செப்.7) எந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு விவரம்!
தமிழகத்தில் நாளை (செப்.7) எந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு விவரம்!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.7) திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஆதார் எண் கட்டாயம்!

அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணை மின்நிலையத்தில் நாளை (செப்.7) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார். அதன் காரணமாக பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பூம்புகார், இந்திராநகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், செல்வலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.7) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என திருப்பூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!