கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் துணை மின்நிலையத்தில் நாளை(ஏப்ரல் 6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை அறிவிப்பு:

உலக நாடுகளை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த பராமரிப்பு பணிகளுக்கான காரணங்களாக, மின் கம்பிகளை சரி செய்வது மற்றும் வயர்களின் மேல் அங்கங்கே உயரமாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவது போன்றவை ஆகும்.

தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை(ஏப்ரல் 7) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக முன்னரே தங்களது வேலைகளை செய்து முடித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிக்கோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிலை, உண்ணாமலைகடை, ஆயிரம்தெங்கு, பயணம், தீக்குறிஞ்சி, ஞாறான்விளை, பேரை, நாலூர், வெட்டுவெந்தி ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here