மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 9) வியாழக்கிழமை அன்று மேலூர் உறங்கான்பட்டி மற்றும் திருமங்கலம் உட்பட சில மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற விவர பட்டியலை அம்மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.
மின்தடை:
நாளை மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள உறங்கான்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி துணைமின் நிலையங்களிலும், திருமங்கலம், அத்திப்பட்டி மற்றும் புளியம்பட்டி துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால் அம்மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெரும் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மதுரை கிழக்கு மின்செயற் பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
உறங்கான்பட்டி துணை மின் நிலையம்:
தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி மற்றும் குன்னத்தூர்.
நரசிங்கம்பட்டி துணை மின் நிலையம்:
முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி, சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிக்குளம், கண்டமுத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாப்பட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கிபட்டி மற்றும் காயாம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 9) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
மேலும், திருமங்கலம் துணை மின் நிலையம்:
ஜவகர் நகர், மறவன்குளம், சியோன்நகர், பிசிஎம் நகர், பகவத்சிங் நகர், சோனை மீனா நகர், பாண்டியன் நகர், பொற்கால நகர், கலைநகர், கற்பகம் நகர் பகுதிகள்,
புளியம்பட்டி துணை மின் நிலையம்:
புளியம்பட்டி, வில்லூர், கெஞ்சம்பட்டி, உபரி, முத்தரப்பன்பட்டி, முனியாண்டிபுரம், போலம்பட்டி, நல்லிவீரன்பட்டி, கவசக்கோட்டை, காரைக்கேணி, குச்சம்பட்டி, இ.சத்திரப்பட்டி, ரெட்டியப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
Exams Daily Mobile App Download
அத்திப்பட்டி துணை மின் நிலையம்:
இதேபோல, அத்திப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் செம்பட்டி, பழையூர், கணவாய்ப்பட்டி, அத்திப்பட்டி, சாப்டூர் பகுதிகளில் நாளை (ஜூன் 9) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்தடை ஏற்படும்.