தமிழகத்தில் நாளை (ஜூன் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் நாளை (06.06.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

TCS நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை மதுரை மாவட்டத்தில் நாளை (06.06.2022) திருப்பாலை மற்றும் ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ஊமச்சிகுளம், தேவி நகர், ஆலாத்தூர், பாறைப்பட்டி, பெத்தாம்பட்டி, மந்திகுளம், எருக்கலை நத்தம், கொடிமங்கலம், கூலப்பாண்டி, வீரபாண்டி, ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால்தோட்டம், மீனாட்சி மிஷன் காலனி, காந்திநகர், மங்களக்குடி, ஜெயவிலாஸ் கார்டன், ஹரிணி ஆறுமுகாநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மிதுன் வாரியம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து சமயநல்லூர் கோட்டம் அலங்காநல்லூர் துணை மின் நிலைய பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கோயில் பாப்பாகுடி, கிருஷ்ணா நகர், சத்யா நகர், முத்தையா நகர், பாக்கியலட்சுமி நகர், பொதும்பு, என்.எம்.எஸ் நகர், மதுரா சிட்டி, இ.ஜி.ஐ.எல். நகர், கவிதா நகர், பட்டகுறிச்சி, குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், வடுகபட்டி, தண்டலை, சிவக்காடு, சரவணா டவுன்ஷிப், சின்ன பொதும்பு ஆகிய இடங்களில் நாளை (திங்கட்கிழமை ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல அவனியாபுரம் மற்றும் அனுப்பானடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை பிரசன்னா காலனி 1 முதல் 9-வது தெரு வரை, பைபாஸ் ரோடு, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் ரோடு,ரிங் ரோடு சந்தோஷ் நகர், குருதேவ் வீடுகள்,வைகை வீதிகள், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார். அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட சிந்தாமணி பஸ் ஸ்டாப் முதல் நெடுங்குளம் மெயின்ரோடு, சிந்தாமணி பகுதிகள், கஜேந்திர புரம், பர்மாகாலனி, வேலம்மாள் மருத்துவமனை பகுதிகள், மற்றும் ஹன்னா ஜோசப் மருத்துவமனை ஆகிய பகுதிகளால் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!