சென்னையில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அதன்படி நாளை சென்னையில் மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஜூன் 10) இப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை மின்நிலையங்களில் மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் சென்னையில் மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, ஐடி காரிடார், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 10) நடைபெற உள்ளது.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – நேற்று ஒரே நாளில் 7,240 பேருக்கு தொற்று உறுதி!
இதனை தொடர்ந்து மயிலாப்பூரில் ஆண்டர்சன் சாலை, கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் உயர் சாலை, டிபிஐ வளாகம், அரிமுத்து ஆச்சாரி தெரு ஆறுமுகம் லேன் மற்றும் மாடல் பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அத்துடன் தாம்பரம் பகுதியில் உள்ள விமலா நகர், பிரின்ஸ் காலேஜ் ரோடு, பெரும்பாக்கம்-சௌமியா நகர், ஒட்டியம்பாக்கம் நேதாஜி நகர், பம்மல்-சங்கர் நகர், எல்ஐசி காலனி, திருநீர்மலை மெயின் ரோடு, ஆதம்நகர், திரு நகர், பவானி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டெல்லஸ் அவென்யூ, பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு, IAF-அகஸ்தியர் கோயில் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, பாரதமா தெரு, சித்தலபாக்கம்-கோவிலஞ்சேரி, மாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிண்டி பகுதியில் ராஜ் பவன், ராமாபுரம், நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி ஜி நகர், பூழித்திவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அடையாறு/திருவான்மியூர் பகுதியில் காமராஜ் நகர் 1 முதல் 3வது மேற்குத் தெரு, ரங்கநாதபுரம் மற்றும் கால்வாய் சாலை, ஐஸ்வரயா காலனி, சி எஸ் காலனி மற்றும் வெங்கடரத்தினம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஐடி காரிடார் பகுதியில் ஒக்கியம் தொரைப்பாக்கம், செக்ரடரியேட் காலனி, குமரன் கோயில், தேவராஜ் அவென்யூ, எழில் நகர்; பல்லவக்கம்-சந்தோஷ் நகர், ஹரிவர்தன் தெரு மற்றும் செயின்ட் தாமஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (ஜூன் 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் போரூர் பகுதியில் அரப்பாக்கம் சாலை, விசாலாட்சி நகர், லட்சுமி நகர்; எஸ்ஆர்எம்சி-பள்ளி தெரு, திருமுருகன் நகர், காரம்பாக்கம் மெயின் ரோடு, திருமிழிசை அன்னிகாட்டுச்சேரி, அமுதூர்மேடு, வயலாநல்லூர், சித்துகாடு, காவனூர்- மோகலிங்கம் நகர், திருவள்ளுவர் நகர், மேட்டு தெரு, திருமுடிவாக்கம்-திருமுடிவாக்கம் நகரின் பகுதிகள், விவேகநாத நகர், நாகன் தெரு, 12வது மற்றும் 13வது பிரதான/திருமுடிவாக்கம் சிட்கோ மற்றும் கே.கே.நகர் பகுதியில் வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர் மற்றும் தசரதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.