தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நாளை (23.02.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது.

TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து வருகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (பிப்.23) அன்று உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – அரசின் திடீர் முடிவு!

அதனால் கோவிந்தாபுரம், அமராவதி நகா், செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, மானுப்பட்டி, சைனிக் பள்ளி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஆலாம்பாளையம், கரட்டு மேடு, எலையமுத்தூர், கிளுவங்காட்டூா், குருவப்பநாயக்கனூர், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி, குட்டியகவுண்டனூா் ஆகிய பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here